பேட்டிங்லில் பம்மல்; பவுலிங்கில் பதுங்கல் ! 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மோசமான சாதனை !

Photo of author

By Parthipan K

பேட்டிங்லில் பம்மல்; பவுலிங்கில் பதுங்கல் ! 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மோசமான சாதனை !

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்று மதியம் 1.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் இந்தியாவைப் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி , ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற முன்னணி வீரர்கள் சொதப்ப இன்றைய நிதானமான ஆட்டத்தை விளையாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் மட்டும் நிலைத்து நின்று அணியை நிலைநிறுத்தினர். அதன் பின்னர் வந்த வீரர்களும் வரிசையாக நடையை கட்ட இந்திய அணி 49.5 அவர்களுக்கு 255 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் பேட் கம்மின்ஸ் மற்றும் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் தலா 2  விக்கெட்டுகளும் சாம்பா மற்றும் ஆஷ்டன் ஆகர் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

finch century

சரி பேட்டிங்கில் தான் சொதப்பினார்கள் என்று பார்த்தால் பவுலிங்கில் அதற்கு மேல் சொதப்பினார்கள். ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள். சிறப்பாக விளையாடிய வார்னர் மற்றும் பின்ச் இருவரும் விக்கெட்டை இழக்காமல் சதம் அடித்து அசத்தினார். கடைசிவரை ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாற  39.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு தேவையான ரன்களை சேர்த்தது. இதன் மூலம் முதன் முறையாக இந்தியாவை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

கடைசியாக இந்திய அணி 2005 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.அதன்பின்னர் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது.