மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள்!
மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் சற்று ஓய்வெடுக்கும்.
உத்தியோகத்தில் வீண் அலைச்சல் வந்து சேரலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில முக்கிய அதிரடி முடிவுகளை எடுப்பீர்கள். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்து சேரும்.
உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சற்று தடை தாமதத்தை கொடுக்கலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம்.
இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.