கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
182
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளதால் ஆலயங்களுக்கு சென்று வருவது மிக நல்லது.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடிவரும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சி கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை வந்து அமையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள்!
Next articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! நன்மைகள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here