மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த நேரத்தில் தான் ரயில்கள் இயக்கப்படும்!
மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அவை நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்நிலையில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்த மாண்டஸ் சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.
மாண்டஸ் புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகின்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாண்டஸ் புயலின் காரணமாக கடலூர் பகுதிகளான கடலூர் ,விழுப்புரம் ,திருவள்ளூர் ,சென்னை உட்பட இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
அதனால் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என அறிவித்துள்ளனர்.