40 வயதிலும் 18 வயது பெண் போல முகம் சுருக்கங்களின்றி அழகாக வேண்டுமா ? இதை செய்யுங்கள் !

0
141

எல்லா பெண்களுக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும், ஒவ்வொருவரும் அழகாவதற்கு அவர்களது இளம்பருவத்தில் என்னென்னவோ பேஸ்பேக்குகளை முயற்சி செய்வார்கள். தங்கள் அழகை மெருகேற்றும் வகையில் பெண்கள் இளம் வயதில் பல வேலைகளை செய்வார்கள். அதுவே திருமணமாகி குழந்தை பெற்றவுடனோ அல்லது குறிப்பிட்ட வயதுக்கு பிறகோ பல பெண்கள் தங்கள் அழகை பராமரிப்பதை கைவிட்டு விடுகின்றனர். முன்பெல்ல்லாம் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு தான் முகத்தில் சுருக்கங்கள் லேசாக விழத்தொடங்கும் ஆனால் இப்போதெல்லாம் 25 பெண்களுக்கு கூட கண்களுக்கு கீழ் சுருக்காங்க விழ ஆரம்பித்துவிட்டது. அதிகமான மன அழுத்தம், அதிகளவில் செல்போன்/கணினி உபயோகப்படுத்துதல், வயதாகுதல் போன்ற பல காரணங்களால் பெண்களுக்கு சுருக்கங்கள் தோன்றுகிறது.Face Wash Vs Cleanser: Which One Should You Use? – SkinKraft

வயதான பின்னர் நமது சருமத்தில் இயற்கையாகவே உற்பத்தியாகும் எண்ணெய் சுரப்பிகளின் உற்பத்தி குறைவாவதும் முகசுருக்கத்திற்கு மற்றுமொரு காரணமாகும். எண்ணெய் பசை இல்லாத காரணத்தினால் சருமம் உலர்ந்து சீக்கிரமே தொங்க ஆரம்பித்துவிடும். இதனை சரிசெய்ய சில வழிகள் உள்ளது அதனை பின்பற்றினால் நீங்கள் முகச்சுருக்கங்களை கொஞ்ச காலம் தள்ளிப்போடலாம். தினசரி குறைந்தது இரண்டு தடவை முகத்தை கழுவுங்கள், வியர்வை இருந்தால் அதனை ஒரு பருத்தி துணியை வைத்து துடைத்துவிட்டு முகத்தை நன்றாக கழுவுங்கள். மென்மைத்தன்மை கொண்ட ஸ்கரப்பரை முகத்திற்கு பயன்படுத்த வேண்டும், இதனால் முகத்தில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகள், மேக்கப்புகள் போன்றவை நீக்கப்படும்.21 Fruits For Glowing, Youthful & Envy-Worthy Skin – SkinKraftface

குறைந்தது வாரத்தில் 5 முறையாவது சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்யுங்கள், அப்போது தான் உடலில் ரத்த ஓட்டம் சீராகி உங்கள் சரும செல்களும் புத்துணர்ச்சி அடைந்து எளிதில் முகச்சுருக்கம் ஏற்படாது. அதிகளவில் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது உங்களது சருமத்தை இளைமையாக வைத்துக்கொள்ள உதவும். அதிகளவு கெமிக்கல் நிறைந்த க்ரீம்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் மற்றும் யூவி கதிர்கள் உடலை பாதிக்காதவாறு பார்த்து கொள்ளுங்கள்.

 

Previous articleஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி!
Next articleஇந்திய சந்தையில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி M04 ! இதன் சிறப்பம்சங்கள் என்ன ?