அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி!

0
93
Job opportunity in Anna University! This is the last date to apply!
Job opportunity in Anna University! This is the last date to apply!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசோசியேட் பணியிடங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மொத்தம் இரண்டு காலி பணியிடங்கள் உள்ளது, மாதம் ரூ 25,000 முதல் ரூ35,000 வரை சம்பளம் வழங்கப்படும், இந்த பணிக்கு பொறியியல் துறையில் பிஇ,பி.டெக் ,எம்சிஏ ,எம்இ ,எம் டெக் போன்ற துறையில் படித்துவிட்டு பணியில் அனுபவம் தேவை,

மேலும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த இணையதளத்தில் வரும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தே டைரக்டர் ,இன்டெர்னல் குவாலிட்டி அசுரன்ஸ் செல் சிபிடிஇ பில்டிங் ,அண்ணா யூனிவர்சிட்டி, சென்னை-600025 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை அனுப்ப வரும் டிசம்பர் 19 ஆம் தேதியே கடைசி நாளாகும்.ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K