இனி தோனி நம் நினைவுகளில் மட்டுமே ! ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கிய பிசிசிஐ !!

0
162

இனி தோனி நம் நினைவுகளில் மட்டுமே ! ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கிய பிசிசிஐ !!

பிசிசிஐ ஆண்டுதோறும் அணி வீரர்களுடம் போடும் ஒப்பந்தத்தில் இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இடம்பெறவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதன் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது.

தோனி, கடைசியாக 2019 ஆம் ஆண்டு நியுசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனி இனிமேல் தொடர்ந்து விளையாடுவாரா என்பதை இரு தரப்புமே சொல்லாமல் தவிர்த்து வந்தது.

இந்த ஆண்டுக்கான  வீரர்களின் ஒப்பந்த பட்டியல்

+ பிரிவு (ரூ.7 கோடி): –

கோலி, பும்ரா, ரோஹித் சர்மா

பிரிவு (ரூ.5 கோடி) : –

அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர், புஜாரா, ரஹானே, தவண், ஷமி, இஷாந்த்சர்மா, குல்தீப், ரிஷப் பந்த், ராகுல்

பிபிரிவு: (ரூ.3 கோடி): –

உமேஷ், சாஹல், பாண்டியா, சஹா, மயங்க் அகர்வால்

சிபிரிவு (ரூ.1 கோடி): –

கேதார் ஜாதவ், பாண்டே, ஹனுமா விஹாரி, சைனி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், அய்யர், வாசிங்டன் சுந்தர்.

Previous articleபொங்கல் பண்டிகையின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் Helo ஆப்
Next articleபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்! தமிழ்நாட்டின் சிறந்த நாள்!!