தொண்டையில் கரகரவென்று சளி தொல்லையா? இது ஒன்று போதும் உடனடி தீர்வு!!

Photo of author

By Rupa

தொண்டையில் கரகரவென்று சளி தொல்லையா? இது ஒன்று போதும் உடனடி தீர்வு!!

தற்பொழுது பெய்து வரும் மழையால் பலருக்கும் ப சளி காய்ச்சல் இருமல் போன்றவை தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் சளி மட்டும் ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால் அதிலிருந்து விடுபடுவதற்குள் பெரும் பாடாக மாறுகிறது.

அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை இரண்டு நாட்கள் பின்பற்றினால் போதும் சளிக்கு முற்றிலும் தீர்வு கண்டுவிடலாம்.

முதலாவதாக சளி தொல்லை இருப்பவர்கள் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். அந்த சளியை போக்குவதற்காக சுடு தண்ணீர் அல்லது தேநீர் குடித்தால் கூட சிறிதளவு சூடாக குடிக்கும் பொழுது சளியை மென்மையாக்கி வெளியே அனுப்பி விடும்.

இரண்டாவதாக தினம்தோறும் உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் உள்ள சளி முற்றிலும் வெளியேறும். அதில் உள்ள பாக்ஷயாக்களும் முற்றிலும் அழிந்து விடும். இம்முறையை ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை பின்பற்ற வேண்டும்.

மூன்றாவதாக புதினா டீ. புதினா டீயில் அதிக அளவு மெந்தோல் எனப்படும் காரணி உள்ளதால் இது சளி இருமல் மூக்கடைப்பு போன்றவற்றிற்கு நல்ல தீர்வளிக்கும். இது ஓர் எதிர்ப்பு சக்தியாகவும் நமது உடலில் செயல்படும்.

நான்காவதாக மூலிகை நீராவி பிடிப்பது. அதாவது யூகாலிப்டஸ் ரோஸ்மேரி ஆகியவற்றை கலந்த தைலமோ அல்லது பொருட்களோ கலந்து நீராவி பிடிப்பதன் மூலம் சளி கரைந்து வெளியேறும்.

ஐந்தாவதாக நமது வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் ஓர் எளிதான வீட்டு வைத்தியம் தான். ஒரு டம்ளர் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கரும் மிளகுத்தூள் கலந்து குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சளி கரைந்து முற்றிலும் வெளியேறும்.