இவர்களுக்கு ரயில் கட்டண சலுகை கிடையாது! ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் அனைத்து போக்கு வரத்து சேவைகளுக்கு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கி உள்ளது.இருந்தாலும் குழந்தைகள் மட்டும் மூத்த குடிமக்கள் பயணம் செய்ய அதிகளவு ஆர்வம் காட்டவில்லை.
அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில் கட்டணத்தில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் சுயேச்சை உறுப்பினர் நவ்நீத் மீண்டும் எப்போது ரயிலில் கட்டண சலுகை வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார்,அதற்கு ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.அப்போது அவர் கூறுகையில் பயணிகள் சேவைக்காக ரயில்வே ரூ 59 ஆயிரம் கோடி மானியம் வழங்கியுள்ளது.இந்த தொகையானது சில மாநிலங்களின் வருடாந்திர பட்ஜெட் தொகையை விட பெரியது என கூறினார்.
ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆண்டுகக்கு ரூ 60 ஆயிரம் கோடி ஆகிறது.அவர்களின் சம்பளத்திற்கு ரூ 97 ஆயிரம் கோடி ,எரிபொருளுக்கு ரூ 40 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.மேலும் புதிய வசதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.தற்போது ரயில்வேயின் நிலைமையை ஒவ்வொருவருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.அண்மையில் வந்த வந்தே பாரத் ரெயில்கள் இருக்கை வசதியுடன் அதிகபட்சம் 500 அல்லது 550 கி.மீ தூரம்வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
படுக்கை வசதி அமலுக்கு வந்த பிறகு நீண்ட தூரத்திற்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்த பிறகு நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் அயோத்தியுடன் ரயில்கள் மூலம் இணைக்கப்படும்.நாட்டில் 41 பெரிய ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பனி நடந்து வருகின்றது.
மீதமுள்ள ரயில் நிலையங்கள் ,படிப்படியாக சீரமைக்கப்படும் என தெரிவித்தார்.2030 ஆம் ஆண்டுக்குள் ரயில்வேயை மாசு இல்லாததாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.ஹைட்ரஜன் ரயில் இயங்குவதும் அவற்றில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளனர்.ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம்வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது.கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த சலுகை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.