யூடியூப் டிடிஎப்  வாசன் சென்றதால்  போலீசார் கொடுத்த தர்மடி! கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு!

0
176
Cuddalore district excitement! YouTube TDF filed a case against 300 people including Vasan!
Cuddalore district excitement! YouTube TDF filed a case against 300 people including Vasan!

யூடியூப் டிடிஎப்  வாசன் சென்றதால்  போலீசார் கொடுத்த தர்மடி! கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்தவர் நடராஜன் இவருடைய  மகன் விக்னேஷ்.இவர் திரைப்படத்துறையில் மேலாளராக பணி புரிந்து வருகின்றார்.மேலும் கடலூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவருடைய மகன் செந்தில்.இவர் திரைப்பட இயக்குநரக இருக்கின்றார்.இந்நிலையில் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள விக்னேஷ் வீட்டின் அருகில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் காட்டினார்கள்.அதன் திறப்பு விழாவிற்கு யூடியூப் புகழ் டிடிஎப் வாசனை வரவேற்றனர்.அதற்காக கடலூர் பாரதி சாலையில் பேனர் வைத்துள்ளனர்.

அதனை கண்ட போலீஸார் அனுமதியின்றி பேனர் வைத்ததாக கூறி விக்னேஷ் மற்றும் செந்திலை கைது செய்தனர்.அதன் பிறகு அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.மேலும் நேற்று நடந்த அலுவலக திறப்பு விழாவுக்கு டிடிஎப் வாசன் கடலூர் வந்தார்.அவரை காண்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பைக்குகளில் கடலூர் புதுப்பாளையத்தில் திரண்டனர்.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதனை அறிந்த கடலூர் போலீசார் விரைந்து வந்து அங்கிருந்தவர்களை கலைந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.ஆனால் அவர்கள் அதனை கண்டுக்கொள்ளவில்லை.மேலும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.ஆனால் ஒரு பயனும் இல்லை.அதனால் கோபம் அடைந்த போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டினர்.

அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.போக்குவரத்து நெரிசலையும் சரி செய்தனர்.இதன் காரணமாக நேற்று புதுப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அனுமதி வாங்காமல் கூட்டம் சேர்த்ததாக டிடிஎப் வாசன் ,செந்தில்,விக்னேஷ் உள்ளிட்ட 300 பேர் மீது புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் அதிக வேகம் ,ஹல்மெட் அணியாமல் வந்தது ,ஒரு பைக்கில் மூன்று பேர் போன்றவைக்காக 20 பைக்குகளுக்கு ரூ 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K