மதுப்பிரியர்கள் அட்டகாசம்! பெரிதும்! பேருந்து நிலையத்திற்கு பயணிகள் செல்ல அச்சம்!
திருப்பூரில் பழைய பேருந்து நிலையம் அண்மையில் தான் திறக்கப்பட்டது.பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது.மேலும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும்,பள்ளி அருகிலும் ,பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை அருகிலும் டாஸ்மாக் கடை அமைய கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.அங்கு வரும் மதுப்பிரியர்கள் இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு பேருந்து நிலையத்தில் நடைப்பாதையில் அலங்கோலமாக விழுந்து கிடக்கின்றனர்.
மேலும் அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளிடம் தொந்தரவு செய்து வருகின்றனர்.அதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.அதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது அதனை வேறு இடத்திற்கு மாற்றி வைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.மேலும் மதுப்பிரியர்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.