முதல்வரின் பரிசால் திக்குமுக்காடி போன சேகர்பாபு! அறநிலையத்துறை அமைச்சருக்கு அடித்த ஜாக்பாட்!
திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமைத்துள்ள நிலையில் அமைச்சரவையில் பெரிய மாற்றம் நிகழலாம் என்று தகவல்கள் வெளிவந்ததையடுத்து அதேபோல இரண்டாவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளனர்.
அந்த வகையில் முதல்வர் தனது மகனின் அமைச்சர் பதவி முடி சூட்டை மையமாக வைத்து மற்ற அமைச்சர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.
அந்த வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த பெரியசாமி பல நாட்களாக எனக்கு வேறு துறை மாற்றி தரும்படி கேட்டு வந்ததையடுத்து தற்பொழுது அவருக்கு ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கியுள்ளனர்.
அதேபோல இந்த ஒன்றரை ஆண்டுகளில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வபோது முதல்வருக்கு அப்டேட் செல்வதாக பல தகவல்கள் வெளிவந்தது.
அதன் அடிப்படையில் முதல்வரின் குட் புக் பக்கத்தில் இடம்பெற்ற அமைச்சர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய பொறுப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்த அறநிலை துறை சேகர் பாபுவிற்கு கூடுதலாக துறை ஒதுக்கி மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஏற்றம் தந்துள்ளார்.
அறநிலைத்துறை அமைச்சராக சேகர்பாபு பதவி பிரமாணம் செய்தது முதல் தற்பொழுது வரை பல செயல்பாடுகள் மூலம் முதல்வரை அசத்தியுள்ளார்.
அதற்கேற்றவாறு சேகர் பாபு,அதிமுக ஆட்சியில் நிலுவையில் இருந்த கோவிலுக்கு வரவேண்டிய வாடகை பாக்கி 260 கோடியை வசூல் செய்துள்ளார். அத்தோடு கடந்த ஆட்சியில் காணாமல் போன சிலைகள் அனைத்தும் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
இதுபோல கோவில்களின் திருப்பணிகள், பக்தர்களின் அடிப்படைத் தேவைகள் என அடுத்தடுத்து திட்டங்களை கொண்டு வந்து முதல்வரையே ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு அவரது செயல் இருந்துள்ளது.
அதனால் அவரை ஊக்குவிக்கும் வகையில் இந்த அமைச்சரவை மாற்றத்தில் முதல்வர், சேகர்பாபுவிற்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பொறுப்பை ஒதுக்கியுள்ளார். இவ்வாறு அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியதை எடுத்து சேகர்பாபு திக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளதாக கூறுகின்றனர்.