இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. அரசு பள்ளிகளில் வந்த அதிரடி நவடிக்கை!
திமுக ஆட்சிக்கு வந்ததை எடுத்து பள்ளி கல்வித்துறையில் பல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அந்த வகையில் கொரோன காலகட்டத்தில் மாணவர்களால் சரிவர படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பல மாணவர்கள் படிப்பில் பின்னோக்கி இருந்ததையடுத்து அவர்களுக்கு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கொண்டு வந்தனர்.
அது மட்டுமின்றி மாணவர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டம் ரீடிங் மாரத்தான் போன்ற புதிய திட்டங்களை அமல்படுத்தி மாணவர் மாணவிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது மாவட்ட அளவில் கலைத்திருவிழா நடைபெற்ற அவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.கனியமூர்த்தி ஸ்ரீமதி வழக்கை தொடர்ந்து பல பள்ளிகளில் மாணவர்கள் தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பள்ளியின் மேலிருந்து குதிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மேலும் சில பள்ளிகளில் மாணவர்களின் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருவதால் இதனை எல்லாம் கண்காணிப்பதற்காகவும் மாணவர்களின் நலன் கருதியும் அனைத்து பள்ளிகளிலும் இனிவரும் நாட்களில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்துள்ளனர்.
இதனின் முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் 4.67 கோடி செலவில் 159 பள்ளி வளாகங்களில் 636 சிசிடி கேமராக்கள் பொருத்த உள்ளனர். இவ்வாறு சிசிடி கேமரா பொருத்துவதன் மூலம் மாணவர்கள் மற்றும் இன்றி ஆசிரியர்களின் செயல்பாடு குறித்தும் அவ்வபோது கண்டு கொள்ளலாம்.