காளான் இவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தா??? அதிர்ச்சி தரும் தகவல்
காளான் – பெரும்பாலானவர்கள் விரும்பும் ஒரு உணவு. சைவ பிரியர்கள் மட்டும் அல்லாமல் அசைவ பிரியர்களுக்கும் ஒரு விருப்ப உணவு. சில்லி, குழம்பு, வறுவல், என பல வழிகளில் சமையல் செய்து சாப்பிடலாம்.
காளான் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் தடுக்கும் வல்லமை கொண்டது. சிலவகை கீமோதெரபி சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்கும் .காளானில் உள்ள புரதச்சத்து உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் கொண்டது. எனவே இதில் உள்ள புரதம் முழுமை தன்மை கொண்டது எனலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது காளான். மேலும் நோய் எதிர்ப்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு செல்களை கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ளதால் புற்றுநோயை தடுக்கும் வல்லமை கொண்டது காளான்.
காளான் உண்பதால் ஆஸ்துமா போன்ற சுவாச குறைபாடுகளை தடுக்க முடியும். காயங்கள் ஆற்றுவதற்கும் உதவும்.மேலும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
இதை சரியான முறையில் பயன்படுத்தினால் அருமருந்து தவறான முறையில் பயன்படுத்தினால் அதுவே கொடிய விசமாக மாறி உயிரைக் கொல்லும்.
முதலில் காளானை சுத்தம் செய்யும் முன்னால் கழுவும் நீரில் எலுமிச்சை சாற்றினை கலக்கவும். ஏனெனில் காளான் மேற்புறம் ஆக்ஸிஜன் உடன் வினைபுரிந்து கருப்பு நிறமாக மாறும். எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் காளான் மேற்புறம் கருப்பாவதை தடுக்கும். பின்னர் ஒரு துணியில் உலர்த்தி பிறகு சமைக்கலாம்.
பொதுவாக பாக்கெட் காளானை மூன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.பிரீசரில் வைத்து பயன்படுத்த கூடாது.
நிறைய புரொட்டீன்ஸ், மினரல், சத்துக்கள் உள்ள காளான் சில நேரங்களில் அஜாக்கிரதை காரணமாக அழற்சி முதல் உயிரிழப்பு வரை ஏற்படுத்த கூடியது.
பாதி எடுத்து உபயோகப்படுத்திய பின் மீதியை மூடிவைத்து பயன்படுத்தலாம். காளான் பயன் படுத்தும் முறைகளை பார்த்தோம். யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம்.
1.காளான் தாய்ப்பாலை வற்ற செய்யும் தன்மை கொண்டது.ஆகவே பாலூட்டும் தாய்மார்கள் காளான் சாப்பிட கூடாது.
2. காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அது மட்டுமல்ல காளானை நன்கு சமைத்த பிறகு தான் சாப்பிடவேண்டும்.
3. சிலருக்கு சரும அலர்ஜி பிரச்சினை இருக்கலாம்.அவர்கள் காளான் சாப்பிடாமல் இருப்பது நல்லது. சாப்பிட்டால் சருமத்தில் அரிப்பு, தடிப்புகள் ஏற்படலாம்.