மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகள் பலமடையும் நாள்!

0
144
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகள் பலமடையும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உறவுகள் பலமடையும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக உள்ளார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தை வேறு இடத்திற்கு மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் கால தாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்து போவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு உறவினர்கள் மூலம் சில நன்மைகள் நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.