நீட் தேர்வு விலக்கு தமிழகத்திற்கு எப்போது?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு எப்போது என அமைச்சர் சுப்பிரமணியன் முக்கிய தகவல்
ஒன்றை கூறியுள்ளார்.நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர நடைபெறும் தேர்வு தான் நீட். அகில
இந்திய அளவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் உள்ள பொது மருத்துவம், பல் மருத்துவம்
ஆகியவற்றில் சேருவதற்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவு மற்றும் தகுதித் தேர்வு
இதுவாகும். இதில் வெற்றி பெரும் மாணவ,மாணவிகள் மட்டுமே மதிப்பெண்கள் அடிப்படையில்
மருத்துவ கல்லூரிகளில் சேர தகுதி பெறுவர்.
இந்த தேர்வானது அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கும் தமிழ்
உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.அடுத்த ஆண்டு 2023-ஆம் ஆண்டிற்க்கான தேர்வு
மே 7, என தேசிய தேர்வு முகமை அறிக்கை வெளியிட்ட நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்வு
விலக்கு எப்போது என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வினை ஆரம்பம் முதலே பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வந்த நிலையில்,
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தங்கள் உயிரையும்
மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன. இதுப்பற்றி தமிழக சுகாதார
துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ள செய்தி குறிப்பில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என மத்திய அரசிற்கு தமிழக அரசு பல்வேறு கோரிக்கைகளையும், மனுக்களையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
நீட் விலக்கு அளிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு
நடவடிக்கை மேற்கொள்ள தாமதபடுதினாலும் இன்னும் தமிழக அரசின் கோரிக்கையை
மறுக்கவில்லை.எனவே கூடிய விரைவில் தமிழகத்திற்கு கட்டாயம் நீட் தேர்வில் இருந்து விலக்கு
கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.