சிப்ஸ் சாப்பிட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!! கடைகளில் வாங்க முண்டியடித்த கூட்டம்!!

0
85
சிப்ஸ் சாப்பிட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!! கடைகளில் வாங்க முண்டியடித்த கூட்டம்!!
சிப்ஸ் சாப்பிட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!! கடைகளில் வாங்க முண்டியடித்த கூட்டம்!!

சிப்ஸ் சாப்பிட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!! கடைகளில் வாங்க முண்டியடித்த கூட்டம்!!

நொறுக்கு தீனி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள்
வரை அனைவரும் நொறுக்கு தீனிக்கு அடிமையாகாதவர்கள் யாருமே இல்லை.எவ்வளவு தான்
சாப்பிட்டாலும் சிலருக்கு கொஞ்சமாவது ஏதாவது கொறித்தால் தான் சாப்பிட்ட உணர்வே
இருக்கும். அதிலும் சிப்ஸ் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

கடைகளில் கலர், கலராக பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகளை குழந்தைகள்
ஆவலுடன் விரும்பி வாங்குவர்.குழந்தைகளுக்கு நொறுக்கு தீனி சாப்பிடுவது அதிக விருப்பம். வெளியே பெற்றோருடன்செல்லும் போது பாலிதீன் பாக்கெட்டுகளில் அடைத்து கலர்,கலராக தொங்கவிடப்பட்டு இருக்கும்
சிப்ஸ் பாக்கெட்டுகளை அழுது,அடம்பிடித்து வாங்குவர்.
அப்படி வாங்கும் சிப்ஸ் பாக்கெட்டுகளில் கொறிக்க சிப்ஸ் உடன் போனஸாக பணமும் இருந்தால்
எப்படி இருக்கும்???.

இப்படி ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர், மாவட்டத்தில் லிங்கசுகூர் தாலுக்கா, உன்னூர் என்ற கிராமத்தில்
உள்ள கடைகளில் சில நாட்களாக சிப்ஸ் பாக்கெட்டுகளின் விற்பனை ஜரூராக நடைபெற்று
வந்துள்ளது.அதற்க்கு காரணம் அந்த பாக்கெட்டுகளில் சிப்ஸ் உடன் ரூ.500 ரூபாய் நோட்டு
இருந்ததும் காரணமாக சொல்லப்படுகிறது.

குறிப்பிட்ட சில கம்பெனிகளின் சிப்ஸ் பாக்கெட்டுகளில் மட்டும் பணம் இருந்ததாக
சொல்லப்பட்ட நிலையில் அந்த பாக்கெட்டுகளை வாங்க மக்கள் கூட்டம் அலை
மோதியது.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கடைகளில் சென்று அந்த சிப்ஸ்
பாக்கெட்டுகளை வாங்க போட்டியிட்டனர்.

இதனால் கடந்த 4 நாட்களில் அந்தப் பகுதி கடைகளில் உள்ள அந்த 5 கம்பெனிகளின் அனைத்து சிப்ஸ் பாக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. இதில் வாங்கிய பாக்கெட்டுகளில் சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவை உண்மையான நோட்டுகளா? இல்லை போலியா?
என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்க புதிதாக வந்த பாக்கெட்டுகளில் எந்தவித பணமும் வைக்க
படாதது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எது எப்படியோ சிப்ஸ் பாக்கெட்டுகளில்
500 ரூபாய் நோட்டு இருந்தது ருசிகர சம்பவமாகவும் பேசும் பொருளாகவும் மாறி விட்டது
என்பதே உண்மை.