குழந்தை காணவில்லை என புகார்.. தாயே விற்பனை செய்தது விசாரணையில் அம்பலம்..!

0
194

குழந்தையை விற்றப்பின் காணாமல் போனதாக நாடமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மனைவி தனலெட்சுமிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.கடந்த 12ம் தேதி தனது குழந்தையை பரிசோதனைக்காக தனலெட்சுமி கிருஷ்ணகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

கழிவறைக்கு சென்ற அவர் திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தையை காணவில்லை என கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் தனலெட்சுமி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர் கூறிய இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தையை தனலெட்சுமி யாரோ ஒரு பெண்ணிடம் தருவது தெரியவந்தது. இதனை அடுத்து, காவல்துறையினர் தனலெட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததை ஒப்பு கொண்டார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், திருப்பூரை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு கடந்தாய்ந்து ஆண்டுகளாக குழந்தை எனவும் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் குழந்தையை தத்தெடுக்கப்போவதாக தெரிவித்ததாகவும் கூறினார். இதனை அடுத்து, அவர்களை தொடர்பு கொண்ட தனலெட்சுமி தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி அவர்களிடம் பேரம் பேசியுள்ளார்.

இதனை அடுத்து, சம்பதன்று குழந்தையை அவர்களிடம் விற்றுள்ளார். மறுநாள் குழந்தையை பற்றி விசாரிக்க அவர்களுக்கு அழைத்த போது செல்போன் உபயோகத்தில் இல்லை என தெரியவந்தது, இதனல, பயந்து போன அவர்குழந்தை விற்பனை செய்ததை தெரிவிக்காமல் காவல்நிலையத்தில் பிகார் அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தை அடுத்து குழந்தையை மீட்ட காவல்துறையினர் தனலெட்சுமி குழந்தையை வாங்கிய சுமதி, உதயா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே குழந்தையை விற்று நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவிடுதியில் குழந்தை பெற்ற மாணவி! முறையாக விசாரணை நடத்தவில்லை என்றால் போராட்டம் நடக்கும்!
Next articleவங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!!!