உடல் துர்நாற்றமா?? எப்படி குளித்தாலும் போகவில்லையா?? இது உங்களுக்கு தான்!!!

0
185
Body odor?? No matter how you take a shower, it doesn't go away?? This is for you!!!
Body odor?? No matter how you take a shower, it doesn't go away?? This is for you!!!

உடல் துர்நாற்றமா?? எப்படி குளித்தாலும் போகவில்லையா?? இது உங்களுக்கு தான்!!!

இன்றைய நிலையில் பலபேர் கவலை படும் ஒரு விசயம் உடல் நாற்றம். தினமும் இருவேளை குளித்தாலும் உடல் பிசுபிசுப்பு, வியர்வை நாற்றம் என பல பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

நமது உடலில் வியர்வை வருவதற்கு காரணம் வியர்வை சுரப்பிகள். உடலில் எக்ரைன் என்ற ஒரு வகையான சுரப்பிகள் உடலின் எல்லா பகுதிகளிலும் உள்ளது. இதில் மற்றொரு சுரப்பி அபோகிரைன். இது உடலில் முடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. எக்ரைன் சுரப்பிகளில் இருந்து வரும் வியர்வை நேரிடையாக தோலில் இருந்து வரும். ஆனால் அபோகிரைன் சுரப்பிகளில் வியர்வை முடியின் வேர்க்கால்களில்( பாலிக்கிள் பகுதி) தான் திறக்கிறது. இங்கிருந்து வியர்வை முடியுடன் சேர்ந்து வெளியேறுகிறது.

எக்ரைன் சுரப்பிகள் பிறப்பிலிருந்து இருக்கும். ஆனால் அபோகிரைன் சுரப்பிகள் பருவக்காலம் முடிந்த பிறகு செயல்படும். இவ்வாறு வெளியேறும் வியர்வை நமது அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள முடிகளின் வழியாக வெளியேறி உடலில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளுடன் சேர்ந்து உடல் நாற்றம் வீசுகிறது.

இன்னும் சிலருக்கு மிக அதிக அளவில் வியர்வை சுரக்கும்.இதற்கு ஹைப்பர் ஹைடோசிஸ் என்று பெயர். இவர்களுக்கு வியர்வை நாற்றம் சற்று அதிகமாகவே இருக்கும்.

இன்னும் சிலருக்கு மிக அதிக அளவில் வியர்வை சுரக்கும்.இதற்கு ஹைப்பர் ஹைடோசிஸ் என்று பெயர். இவர்களுக்கு வியர்வை நாற்றம் சற்று அதிகமாகவே இருக்கும்.

இவர்கள் சுத்தத்தை கடைபிடிக்காவிட்டால் அதிக நாற்றம் ஏற்படும்.

இந்த நாற்றத்தை போக்க வீட்டில் செய்ய கூடிய வழிமுறைகள் பார்ப்போம்.

1. தினமும் இருவேளை குளிக்க வேண்டும்

2.முடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் மாதம் ஒரு முறை சுத்தமாக “கிளீன் சேவ்” செய்வது நல்லது.

3.குளிக்கும் வெந்நீரில் கல்உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குளிக்கலாம்.

4.ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை இரவு குளிக்கும் தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலையில் குளித்து வர உடல் நாற்றம் நீங்கும்.

5. டியோ ஸ்பிரே பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையாக கிடைக்கும் சந்தன கட்டையை உரசி இரவு பூசி வந்தால் உடல் நாற்றம் நீங்கும்.

6. இயற்கை கிருமி நாசினியான மஞ்சளை இரவு தடவலாம்.

7. டீத்தூள் அதிக அளவில் சேர்த்து கெட்டியாக டிகாஷன் தயாரித்து இரவு தூங்கும் போது அக்குள் பகுதியில் தடவி வந்தால் நாற்றம் நீங்கும்.

இந்த வழிகளை பின்பற்றுவதுடன் சரியான தூக்கம், உடல் சுத்தம் உணவு பழக்கங்களை மேற்கொண்டால் நிச்சயம் உடல் நாற்றம் தவிர்க்க முடியும்.

Previous articleஇனி ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை! இதை மட்டும் செய்தால் போதும்!!
Next articleகுட் நியூஸ்: பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!!