உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அனைவரும் தாங்கள் ஸ்லிம் அண்ட் ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். உடல் எடையை குறைக்க பலரும் பலவித டயட் இருப்பது, பல கடினமான உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்வது அல்லது உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது என்று பலவிதமான செயல்களை செய்வார்கள். எவ்வளவு தான் உடற்ப்பயிற்சி செய்தாலும் சிலருக்கு உடல் எடை குறையவே குறையாது, அதற்கு காரணம் அவர்கள் தெரியாமல் செய்யக்கூடிய சிறு சிறு தவறுகள் தான். அந்த தவறுகளை திருத்திக்கொண்டால் உடல் எடை மளமளவென குறைந்து ஃபிட் ஆக காட்சியளிக்கலாம்.
1) உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் செயற்கை இனிப்பு சுவையூட்டப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் சோடா போன்ற செயற்கை சுவையூட்டப்பட்ட பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த செயற்கையான பானங்களை அதிகளவில் குடித்தால் உங்களது உடல் எடை அதிகரித்துவிடும்.
2) பழச்சாறு உடலுக்கு உண்மையாகவே நன்மைபயக்கக்கூடியது தான் ஆனால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை குடிப்பது உடலுக்கு மோசமான ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் மற்றும் உடல் பருமனுக்கும் வழிவகுக்கும்.
3) பொதுவாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளில் குறைந்த அளவிலேயே நார்சத்து, புரதசத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது மற்றும் இதில் அதிகளவு சர்க்கரை உள்ளதால் உங்கள் உடலில் அதிகளவு கலோரிகள் சேர்ந்து உடலை பருமனாக்கிவிடும்.
4) எண்ணெயில் பொறித்த சிப்ஸ் வகைகள் அனைவருக்கும் பிடிக்கும் தான், அது ருசியாக மட்டும் தான் இருக்குமே தவிர அதில் உடலுக்கு தேவையான எவ்வித ஊட்டச்சத்துக்களும் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொண்டு அதனை சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.
5) ஏதேனும் இனிப்பு வகைகளை நீங்கள் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் டார்க் சாக்லேட்டை சாப்பிடுங்கள், மறந்தும் கூட மற்ற இனிப்பு சுவையுள்ள மிட்டாய்களை சாப்பிடாதீர்கள்.
6) மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் உங்கள் உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவை அதிகரித்து உங்கள் உடலை பருமனாக்குகிறது, எனவே இதனை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது.