மோடி அரசு சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன்? மத்திய அரசை விளாசிய டெல்லி முதல்வர்!!

0
170

மோடி அரசு சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன்? மத்திய அரசை விளாசிய டெல்லி முதல்வர்!!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் டெல்லியின் முதல்வர் மற்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

அக்கூட்டத்தில் பேசிய அவர்,கடந்த சில நாட்களாக,எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு அதிக அளவில் நடந்து வருகிறது.இதனை தடுக்க இந்திய ராணுவர்கள் தனது உயிரையும் பணைய வைத்து சீன ராணுவத்துடன் போராடுகின்றனர்.இந்திய ராணுவர்களின் இந்த போராட்டம் இந்திய மக்களின், ஒவ்வொரு நபரின் மனதிலும் பெரிய வலியை ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு எல்லாம் சரியாகிவிட்டது என கூறி சீனா நாட்டின் இறக்குமதியை அதிகளவில் அனுமதிக்கிறது.கடந்த 2020-2021-ம் நடப்பு ஆண்டில் சுமார் 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்தது.அதே அடுத்த நடைபாண்டில்,அதாவது 2022 ஆம் நடைபாண்டில் 95 பில்லியன் டாலராக அதிகரித்து இறக்குமதியை அனுமதித்தது மத்திய அரசு.

இவ்வாறு எல்லை ஆக்கிரமிப்பை மறந்து இறக்குமதியை அதிகரிக்கும் மத்திய அரசே, எங்கள் ராணுவத்தின் உயிர்கள் மீது மதிப்பு இல்லையா? மரியாதை இல்லையா? என விளாசிய கெஜ்ரிவால்,இந்தியாவில் சீன இறக்குமதியை தடை செய்தால்,நம் நாட்டின் மதிப்பு அவர்களுக்கு தெரிய வரும் என்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தைரியமாக செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர்சீன தயாரிப்புகளை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்றும், சீன பொருட்களின் விலையை விட,இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் கூட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே நாங்கள் வாங்குவோம் என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Previous articleஅரசுப்பள்ளி ஆசிரியை செய்த தரமானச் செயல்!! குவியும் பாராட்டுக்கள்!!
Next articleகுடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ 1000 – தலைமை செயலகத்திலிருந்து வெளிவரும் முக்கிய தகவல்!