திடீரென சாலையில் அமர்ந்து மக்கள் போராட்டம்! அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என கேள்வி!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடியில் சாக்கடை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்யவில்லை. அதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகளவு சீரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பலமுறை மனு கொடுக்கப்பட்டது.ஆனால் அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்து வருகின்றது.
அதானல் அதிகளவு கோபம் அடைந்த கிராம மக்கள் எஸ்.ராமலிங்காபுரம் செல்லும் சாலையில் மக்கள் அனைவரும் கூடி அந்த வழியாக செல்லும் பேருந்துகளை மறைத்து மறியலில் ஈடுபட்டனர்.அதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.மேலும் இது குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் அந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்துதராமல் இருப்பதாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் மக்களிடம் அனைத்தையும் கேட்டறிந்த போலீசார் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் சாலையில் இருந்து கலைந்து சென்றனர்.இந்த சாலை மாறியலினால் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து சேவைக்க பாதிக்கப்பட்டது.