வெறும் வயிற்றில் தண்ணீருடன் இதை மட்டும் கலந்து குடித்து பாருங்கள்! உடல் இரும்பு போல மாறும்
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் உடலை கட்டுகோப்புடனும், வலிமையுடனும் வைத்துக்கொள்ள முயற்சிப்பார்கள்.அதற்காக அவர்கள் பல்வேறு மருந்துகள், உணவுகள் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை முயற்சிப்பார்கள். அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளை தண்ணீருடன் கலந்து குடிப்பதால் உடலை இரும்பு போல மாற்றலாம்.
தற்போதைய சூழலில் மக்களால் அதிகளவு விரும்பப்படும் இயற்கை இனிப்பு பொருளாக வெல்லம் மாறி வருகிறது. மக்கள் தங்கள் தேநீர், இனிப்புகள், ரொட்டி, அரிசி மற்றும் குளிர்ந்த காலநிலையில் செய்யப்படும் பல்வேறு சுவையான உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளில் வெல்லத்தை சேர்க்கின்றனர்.
பொட்டாசியத்தின் களஞ்சியமான வெல்லம் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. மேலும் இது கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்துள்ளது.
குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிடுவதற்கான மற்றொரு ஆரோக்கியமான வழி, அதை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதுவாகும். ஆயுர்வேதம் இந்த அற்புதமான பானத்தை ஒரு இயற்கை நச்சுப் பொருளாகவும், செரிமானத்தை அதிகரிக்கும் ஒன்றாகவும் நமக்கு அளித்துள்ளது. எடை இழப்பு அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களும் வெல்லத்தை சப்பிடுவதன் மூலமாக பயனடையலாம். வெல்லம் இரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது.
வெல்லம் கலந்த நீர் தயாரிப்பது எப்படி?
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி நன்றாக சூடாக்கி கொள்ளவும். அதில் 1 அங்குல வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். அதனால் அது சிறிது சிறிதாக உருகும். இதன் பின்னர் அது சிறிது ஆறியதும் வடிகட்டி குடிக்கவும்.
இதற்கு மாற்றாக, நீங்கள் வெல்லத்தை நன்றாக அரைத்து, ஏற்கனவே கூறியது போல சுட வைத்த வெதுவெதுப்பான நீரில் நேரடியாகவும் கலக்கலாம். இந்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.
எலும்பு ஆரோக்கியம்
நாம் உணவில் பணபடுதும் இந்த வெல்லம் உடல் எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது. மேலும் இது காலில் ஏற்படும் மூட்டு வலிகளைப் போக்கும், மூட்டுவலி போன்ற எலும்புக் கோளாறுகளைக் குணப்படுத்தி, உடலைத் தணிக்கவும் உதவுகிறது. இதில் பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிகமாக உள்ளதால், வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து குடிப்பது உடலில் இரத்த அழுத்தத்தை சமப்படுத்தவும் உதவுகிறது.
இரும்புச்சத்து குறைபாட்டை மேம்படுத்துகிறது
வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து குடிப்பது உங்களுக்கு உடலில் பல அற்புதங்களைச் செய்யும். உங்கள் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் அதை சரி செய்ய உதவும். இது இரும்பு மற்றும் ஃபோலேட் மூலம் செறிவூட்டப்பட்டுள்ளது.
மேலும் இது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை நன்கு பராமரிக்கிறது. அந்த வகையில் இரத்த சோகை உள்ள பெண்களும் கூட வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து சாப்பிடலாம்.
உடலில் இருந்து நச்சை நீக்கும்
வெல்லத்தில் உடலை சுத்தப்படுத்தும் தன்மையும் உள்ளது. அதனால் இது இயற்கையாகவே உடலில் இருக்கும் நச்சை நீக்குகிறது, மேலும் இதன் மூலமாக இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது.
இவ்வாறு வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை கலந்து தொடர்ந்து குறைந்த அளவில் குடித்து வந்தால், உங்கள் சருமத்திற்கு தேவையான பளபளப்பு கிடைக்கும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். குறிப்பாக தீங்கு விளைவிக்கும் நச்சுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படும்.
எலக்ட்ரோலைட் சமநிலை பராமரிப்பு
வெல்லத்தின் பல நன்மைகளில் ஒன்று பொட்டாசியம் நிறைந்திருப்பதால், உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. அதனால் நீர் தேக்கம் குறைந்து, உடலில் இருக்கும் அந்த கூடுதல் எடையை நீங்கள் குறைக்கலாம்.
ஆனால், நீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் இருந்தால், மேற்குறிப்பிட்ட வகையில் வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மாற்று நாட்களில் மட்டும் குடிக்கவும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
வெல்லம் மெக்னீசியம், வைட்டமின் பி1, பி6 மற்றும் சி ஆகியவற்றுக்கான சிறந்த ஆதாரமாகும். இது முழுக்க ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது. எனவே உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதனால் இரும்பு போல உடலை பெற தினமும் காலையில் இந்த பானத்தை குடிப்பதை தொடருங்கள்.