இந்த 5 உணவுகளை பச்சையா சாப்பிட்டா போதும்! பானை போல இருக்கும் தொப்பையும் குறைஞ்சிடும்

0
185
Health Tips to Reduce Body Weight in Tamil
Health Tips to Reduce Body Weight in Tamil

இந்த 5 உணவுகளை பச்சையா சாப்பிட்டா போதும்! பானை போல இருக்கும் தொப்பையும் குறைஞ்சிடும்

வளர்ந்து வரும் இந்த நவீன உலகில் நாம் உண்ணும் துரித உணவு பழக்கவழக்கங்கள் உடலில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகிறது. அதில் ஒன்று தான் உடல் எடை கூடுவது. இன்று நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை வயதுக்கு மீறிய உடல் எடையேயாகும். மேலும் குறிப்பாக இளவயது குழந்தைகள் கூட அளவுக்கு அதிகமான எடையுடன் இருப்பதை கவனித்திருப்போம்.

இந்த எடை உயர்வுக்கு உடலில் சேரும் அளவுக்கு அதிகமான கொழுப்பே காரணமாக கூறப்படுகிறது. அந்த வகையில் உடலில் சேரும் அளவுக்கு அதிகமான கொழுப்பை குறைக்க ஒவ்வொருவரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆங்கில மருந்துகள் மற்றும் உடற்பயிற்சிகள் என ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற வகையில் முயற்சிப்பார்கள்.

நாம் உண்ணும் உணவு வகைகளை வைத்தே உடல் எடையை குறைக்க முடியும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பண்டைய காலம் முதல் இன்று வரை பல்வேறு நோய்களுக்கு உணவே மருந்தாக நாம் பயன்படுத்தி வருகிறோம். அந்தவகையில் உடலுக்கு வலிமையை தரக்கூடிய பல ஆரோக்கியமான உணவுகளையும் நாம் சாப்பிட்டு வருகிறோம்.

அந்த வகையில் நாம் உண்ணும் உணவுகள் உங்கள் தொப்பை கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. எடை இழப்பு மற்றும் உடலில் சேரும் அளவுக்கு அதிகமான கொழுப்பை விரைவாக குறைக்க உதவும் பச்சை நிற உணவுகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்துகொள்ளுங்கள்.

பச்சை பயிறு

பச்சை பயிறு

நாம் உணவில் பயன்படுத்தும் பச்சை பயிரில் முக்கிய வைட்டமின்களான ஏ, பி, சி மற்றும் ஈ, அத்துடன் கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல தாதுக்கள் உள்ளன. குறிப்பாக இதில் மிகக் குறைந்த அளவே கொழுப்புள்ளது. மேலும் கூடுதலாக, இதில் உடலுக்கு வலிமை தரக்கூடிய வகையில் நிறைய புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை இரண்டும் உங்களை முழுதாக உணர வைத்து அளவுக்கு அதிகமான உடல் எடையைக் குறைக்க உதவும்.

பச்சை மிளகாய்

பச்சை மிளகாய்

அன்றாட சமையலில் காரத்திற்காக பயன்படுத்தும் பச்சை மிளகாய் கூட உங்கள் எடையை குறைக்க உதவும். பச்சை மிளகாயில் காணப்படும் ஒரு தெர்மோஜெனிக் பொருளான கேப்சைசின், உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலமாக உடலில் அளவுக்கு அதிகமாக தேங்கியுள்ள கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கிறது. ஆய்வுகளின்படி, பச்சை மிளகாயை உட்கொள்வது உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை சுமார் 3 மணிநேரத்திற்கு 23% வரை அதிகரிக்கும். இதனால், உங்கள் எடையானது விரைவாக குறையும்.

ஏலக்காய்

ஏலக்காய்

நம் உணவில் பயன்படுத்தும் ஏலக்காய், “மசாலா ராணி” என்றும் குறிப்பிடப்படுகிறது. இது குறிப்பாக ஒரு தெர்மோஜெனிக் தாவரம் என்று அழைக்கபடுகிறது. இது உடல் உள்ள  வெப்பநிலையை அதிகரிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது.

மிகச்சிறந்த செரிமானப் பொருட்களில் ஒன்றாக விளங்கும் ஏலக்காயை உங்கள் உணவில் அடிக்கடி சேருங்கள். ஏலக்காய் மற்ற உணவுகளை போல் அல்லாமல், உடல் வேகமாக ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கறிவேப்பில்லை உங்கள் உடல் ஆரோக்கியத்திலும், முடி பாரமாரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கறிவேப்பிலை உங்கள் உடலில் சேரும் அளவுக்கு அதிகமான கொழுப்பின் அளவைக் குறைத்து நச்சுகள் மற்றும் கொழுப்பை வெளியேற்றவும் உதவுகிறது.

மேலும், இந்த இலை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கிறது. உடலில் உள்ள அதிக எடையை குறைக்க கறிவேப்பிலையை தொடர்ந்து எதாவது ஒரு வகையில் சாப்பிடுங்கள்.

கிரீன் டீ

கிரீன் டீ

கிரீன் டீ குடிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உங்கள் எடை இழப்பை துரிதப்படுத்துகிறது. மேலும் இது புற்றுநோயை எதிர்த்தும் போராடுகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகவும் உள்ளது.

அந்த வகையில் பச்சை தேயிலை மூலமாக எடை குறைப்பு ஒரு இயற்கையான செயல்முறையாக மாறும். ஏனெனில் இது உங்கள் பசியை அடக்குகிறது, இதனால் நீங்கள் குறைவாக சாப்பிடலாம். அந்த வகையில் இது விரிவான எடை இழப்புக்கு உதவுகிறது.

Previous articleவெறும் வயிற்றில் தண்ணீருடன் இதை மட்டும் கலந்து குடித்து பாருங்கள்! உடல் இரும்பு போல மாறும்
Next articleஅழைப்பை துண்டித்த காதலி… தற்கொலை செய்து கொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!