அனுமதி இன்றி இந்த தவறை செய்து விடாதீர்கள்!! ரூ ஒரு லட்சம் வரை அபராதம்.. மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை!!

0
189

அனுமதி இன்றி இந்த தவறை செய்து விடாதீர்கள்!! ரூ ஒரு லட்சம் வரை அபராதம்.. மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை!!

சென்னை மாநகராட்சியானது மக்களுக்கு எச்சரிக்கை விடும் விதத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் பல இடங்களில் சுவர்களில் அனுமதி இன்றி பலரும் போஸ்டர் ஒட்டி செல்வதால் இது குறித்து புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது.

எனவே பாதுகாப்பு சட்டம் 1959ன் படி சென்னையின் பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பர சம்பந்தமான போஸ்டர் மற்றும் பேனர் ஏதேனும் வைக்க நேர்ந்தால் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் ஒட்டப்படும் போஸ்டர்ஸ் அகற்றப்பட்டு ஒட்டியவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு போஸ்டர்ஸ் ஓட்டுபவர்கள் மீது தற்பொழுது வரை காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் பட்சத்தில் , கடந்த மாதம் மட்டும் 30 ஆம் தேதி முடிவடைவதற்குள் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இம்மாதம் 15ஆம் தேதிக்குள் இதே போல 15 மண்டலங்களிலும் போஸ்டர் ஒட்டிய 252 நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு அவர்களிடம் இருந்தும் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் முடிவதற்குள்ளேயே அபராத தொகையானது ஒரு லட்சத்தை தாண்டும் பட்சத்தில் தற்பொழுது கடுமையான விதிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் சென்னை மாநகராட்சியின் பொது இடங்களில் அனுமதி இன்றி போஸ்டர்ஸ் ஒட்டுபவர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து கூறியுள்ளனர்.

Previous articleஏப்ரல் 1 முதல் கேஸ் சிலிண்டர் ரூ.500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு
Next articleஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு!! முன்கூட்டியே இதை செய்யவில்லை என்றால் சாமி தரிசனம் ரத்து!!