பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம் ஏற்படுமா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்பு!

0
313
Will there be a change in the Pongal gift package? Official information is likely to be released in a couple of days!
Will there be a change in the Pongal gift package? Official information is likely to be released in a couple of days!

பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம் ஏற்படுமா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்பு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிப்படைந்து வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது எந்த ஒரு பண்டிகையும் கூட்டம் சேர்ந்து கொண்டாடுவதற்கு அரசு அனுமதிக்கவில்லை.அதனால் பலரும் எளிமையான முறையிலே பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்ணிக்கையை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடுவதற்கு மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.

தமிழர்களுக்கே உரிய திருநாளாக கொண்டாடப்படுவது பொங்கல் தான்.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்குவது வழக்கம்.இந்த பண்டிகையை தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.மேலும் தமிழக அரசு குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் திருநாளையொட்டி இலவசமாக வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும்.

இந்நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பொங்கல் திருநாளையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசி,சர்க்கரை போன்ற பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த பொங்கல் பரிசு தொகை எவ்வாறு வழங்கப்படும் என ஆலோசை நடத்தப்பட்டு வந்த நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டத்தில் மூத்த அமைச்சர்கள்,அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பானது இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.மேலும் குறிப்பாக இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 1500 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
Next articleபள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அப்டேட்! மாணவர்களே தவறவிடாதீர்கள்!