இனி இவர்களுக்கு மட்டும் ரயில் கட்டணத்தில் மிகப்பெரிய தள்ளுபடி…அசத்தும் ரயில்வே நிர்வாகம் !

0
140

இந்திய ரயில்வே நிர்வாகம் தனது பயணிகளின் நலனுக்கென பல வசதிகளை செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில் தற்போது ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியினை ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. அதாவது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் விலக்கு அழிப்பது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில சிறப்பான செய்திகளை தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரயில்வே நிர்வாகம் தனது பயணிகளுக்கு வழங்கிய சலுகையினை மீட்டெடுக்க போகிறது.

ரயில்வே நிர்வாகம் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை மாற்றப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது மட்டுமின்றி மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டுகளில் சில சலுகைகள் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மூத்த குடிமக்களுக்கான மானியத்தை தக்க வைத்துக் கொண்டு இந்த சலுகைகளின் விலையை குறைக்க ரயில்வே முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, ரயிலில் பயணம் செய்யக்கூடிய மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மட்டுமின்றி புனித யாத்திரை செல்லும் பயணிகள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் ரயில் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கான சேவைகளை மீண்டும் செயல்படுத்துவது மற்றும் ரயில் கட்டணங்களில் தள்ளுபடி வழங்குவது குறித்து லோக்சபாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு லோக்சபாவில் பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 2019-2020ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு ரயில்வே ரூ.59,837 கோடி மானியமாக வழங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ஸ்லீப்பர் மற்றும் மூன்றாவது ஏசி கோச்சில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது என்று கூறியுள்ளார்.