தெருவுக்கு உதயநிதி பெயர் வைக்க தீர்மானம்? கடைசி நேரத்தில் பல்டி அடித்த மேயர் 

Photo of author

By Amutha

தெருவுக்கு உதயநிதி பெயர் வைக்க தீர்மானம்? கடைசி நேரத்தில் பல்டி அடித்த மேயர்

தெருவிற்கு உதயநிதியின் பெயரை வைக்கும் தீர்மானத்திற்கு கடைசி நேரத்தில் பல்டி அடிக்கும் விதமாக கரூர் மேயர் கவிதா மறுப்பு தெரிவித்துள்ளார் .

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும் தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் பெயரை கரூர் மாநகராட்சியில் உள்ள ஒரு தெருவிற்கு வைக்க வேண்டும் என கரூர் 36- வது வார்டு கவுன்சிலர் வசுமதி நேற்று முன்தினம் நடைபெற்ற கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அதனை திமுகவை சேர்ந்த 46 கவுன்சிலர்களும் ஏற்றுக்கொண்டனர். இதனை அடுத்து ஒரு மனதாக பெயர் வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த செயல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும், கட்சியினரிடையே பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.மேலும் திமுக மேலிடத்தில் இருந்து கண்டனம் வந்ததால் அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ள படவில்லை என கவிதா கூறினார்.

இதுபற்றி பேசிய அவர் தெருவிற்கு உதயநிதியின் பெயர் வைக்கும் தீர்மானத்தை கவுன்சிலர் வசுமதி கொண்டு வந்த பொது அந்த தீர்மானத்தை அனைத்து கவுன்சிலர்களும் வரவேற்றனர்.

ஆனால் மாநகராட்சி கூட்டத்தில் அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப் படவில்லை எனவும் நான் கூறியது மைக்கில் தெளிவாக கேட்காததால் தவறான தகவல்களை பரப்பி விட்டுள்ளனர் என்று கூறி சமாளித்தார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் கடும் விமர்சனங்களால் இந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.