விவசாயிகளை ஏமாற்றிய தமிழக அரசு? உடனே இதை செய்ய வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கமாக இந்த பரிசு தொகுப்பில் வழங்கப்படும் செங்கரும்பு இந்த ஆண்டு வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர்மீண்டும் கரும்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது.
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கண்டனத்திற்குரியது. மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசில் கடந்த ஆண்டுகளில் கரும்பு இடம்பெற்று வந்தது.
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கண்டனத்திற்குரியது. மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசில் கடந்த ஆண்டுகளில் கரும்பு இடம்பெற்று வந்தது. (1/2) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 23, 2022
இதை தற்போது வழங்காமல் இருப்பதன்மூலம், அதனை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகளை இந்த அரசு ஏமாற்றியுள்ளது. ஆகவே, விவசாயிகளின் நலன் கருதி பொங்கல் பரிசுத் தொகுப்பில் தமிழக அரசு கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதை தற்போது வழங்காமல் இருப்பதன்மூலம், அதனை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகளை இந்த அரசு ஏமாற்றியுள்ளது. ஆகவே, விவசாயிகளின் நலன் கருதி பொங்கல் பரிசுத் தொகுப்பில் தமிழக அரசு கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். (2/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 23, 2022