ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட் திட்டம் பற்றி தெரியுமா ? எந்தெந்த வங்கிகளில் இந்த சலுகை கிடைக்கும்?

0
124

இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு ரெப்போ விகிதத்தை கிட்டத்தட்ட ஐந்து முறை உயர்த்தியுள்ளது. வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்துவதால் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதமும் உயரக்கூடும். இதுவரை ரெப்போ விகிதத்தை உயர்த்தியது மட்டுமின்றி இனிவரும் காலங்களிலும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்கள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு மிகப்பெரிய அளவில் வட்டி விகிதத்தை பெறுவார்கள். ஆனால் சாதாரண FD இல், முதிர்வு காலம் வரை வட்டி விகிதம் அப்படியே இருக்கும், இதற்கிடையில் வட்டி விகிதங்கள் கூடினாலும், குறைந்தாலும் பிரச்சனையில்லை.

பிக்ஸட் டெபாசிட்டுகளின் வட்டி விகிதங்களை சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொள்ள ஃப்ளோட்டிங் விகிதங்கள் உதவுகின்றன. ஃப்ளோட்டிங் விகிதங்கள் பிக்ஸட் டெபாசிட்டுகளில் கணக்கின் முதிர்வு வரை வட்டி விகிதங்கள் மாறிக்கொண்டே இருக்கும். வங்கி எஃப்டி மீதான வட்டியை அதிகரிக்கும் போதெல்லாம், உங்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் அதுவே வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் போது உங்களுக்கு குறைவான தொகையே கிடைக்கும்.

ஐடிபிஐ வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை ஃப்ளோட்டிங் விகிதங்கள் எஃப்டிக்களை பயன்படுத்தும் விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறது. ஐடிபிஐ வங்கியில், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு இடைவெளியில் வட்டி திருத்தியமைக்கப்படும். யெஸ் வங்கி 18 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட கால அவகாசம் கொண்ட எஃப்டி கணக்குகளுக்கு 7.85% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

author avatar
Savitha