விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய வசதி…பயணிகள் இனி காத்திருக்க வேண்டியதில்லை!

0
198

விமான நிலையங்களில் பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு ஒரு சிறப்பான வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இனிமேல் விமான பயணிகள் தங்கள் பைகளில் இருந்து லேப்டாப், மொபைல், சார்ஜர் போன்ற மின்னணு சாதனங்கள் எதையும் அகற்றாமல் விமான நிலையத்திற்குள் செல்ல முடியும், ஏனென்றால் விமான நிலையத்தில் புதிய நவீன ஸ்கேனர்கள் பொருத்தப்படவுள்ளது. மேலும் பயணிகள் தங்களது மடிக்கணினிகள், மொபைல்கள் மற்றும் சார்ஜர்களை ட்ரேயில் வைக்காமல் விமான நிலைய பாதுகாப்பு சோதனையையும் முடிக்க முடியும்.Extra CISF, immigration staff, more scanners to free up Delhi airport |  Latest News India - Hindustan Times

அதுமட்டுமல்லாது விமான பயணிகள் இனிமேல் சோதனைக்காக விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஏவியேஷன் செக்யூரிட்டி ரெகுலேட்டர் பீரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பிசிஏஎஸ்) எனப்படும் விமானப் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு விமான நிலையங்களில் கணினி டோமோகிராபி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஸ்கேனர்களை நிறுவ பரிந்துரை செய்திருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நீங்கள் உங்களது மின்னணு சாதனங்களை அகற்ற வேண்டாம். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல விமான நிலையங்களில் இந்த நவீன ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டுள்ளது.Airport New Facility: New modern scanner will installed at airport for  passengers facility, know details - Rightsofemployees.com

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பயணிகளுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படாதவாறு பாதுகாப்பு சோதனையை மேற்கொள்ள முடியும். இந்த புதிய நவீன ஸ்கேனர்கள் முதலில் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் நிறுவப்படும் என்று கூறப்படுகிறது. இன்னும் ஒரு வருட காலத்திற்குள் அனைத்து விமான நிலையங்களிலும் இந்த நவீன ஸ்கேனர்கள் பொருத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Previous articleஇரண்டாவது டெஸ்ட் போட்டி! இந்தியா முன்னிலை!
Next articleநயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதிப்பு !