என்ன சார் நீங்க இப்படி எல்லாம் பண்றீங்க.. மாணவிகளின் கதறல்!! சேலம் அரசு பள்ளியில் நடந்த அவலம்!

Photo of author

By Rupa

என்ன சார் நீங்க இப்படி எல்லாம் பண்றீங்க.. மாணவிகளின் கதறல்!! சேலம் அரசு பள்ளியில் நடந்த அவலம்!

Rupa

என்ன சார் நீங்க இப்படி எல்லாம் பண்றீங்க.. மாணவிகளின் கதறல்!! சேலம் அரசு பள்ளியில் நடந்த அவலம்!

தற்பொழுது பெண்களுக்கு திரும்பிய இடமெல்லாம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்கும் பட்சத்தில் அதிக அளவில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளே பாதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு கல்லூரி ஆசிரியர் ஒருவர் படிக்கும் மாணவியிடம் அவதூறாக பேசும் ஆடியோ வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல தற்பொழுது சேலம் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. சேலம் மாவட்டம் சேலத்தான்பட்டியில் அரசு ஊராட்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் அதில் ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் சுரேஷ் பாபு என்பவர் மாணவர்களுக்கு வெகு நாட்களாக பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுத்து வருவதாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் தலைமை ஆசிரியரோ சிறிதும் கூட அதனை கண்டு கொள்ளாமல் புகார் அளிக்கும் மாணவிகளையே இதையெல்லாம் வெளியே சொல்ல கூடாது என்று மிரட்டி வந்துள்ளார்.

இவ்வாறு சேகர்பாபுவை யாரும் கண்டிக்காததால் தினந்தோறும் வகுப்பறைக்கு குடித்துவிட்டு வருவது அங்குள்ள மாணவர்களை கை கால் அழுத்த சொல்வது என்று பல வேலைகளை வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி அங்கு படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவுகளையும் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் இவர் மாணவிகளின் கழிவறையின் நுழைவாயில் நின்று கொண்டு சிகரெட் பிடித்தபடியே மாணவிகளை பார்த்து பாலியல் ரீதியான சைகை காட்டியுள்ளார்.

இதனை பொறுக்க முடியாத மாணவிகள் அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பின்பு பெற்றோர்கள் அப்பள்ளிக்கு வந்து சேகர் பாபுவை சரமாரியாக தாக்கியதோடு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு நடைபெற்று வந்த முற்றுகைப் போராட்டத்தை கலைத்து சேகர் பாபுவை கைது செய்து கூட்டி சென்றனர்.

பின்பு இவர் வேற ஏதேனும் வழிகளில் வெளியே வந்து விடுவார் என பெற்றோர்கள் எண்ணி தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று அவர் மீது பாலியல் ரீதியான வழக்கு போடும்படி வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி போலீசார் சேகர்பாபு மீது பாலியல் ரீதியான வழக்கு தொடுத்து மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். மேலும் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் இவர் கைது செய்யும் நிலையில் கூட குடித்து இருப்பது கண்டறியப்பட்டது தான்.

இதுபோல அரசு பள்ளி ஆசிரியர்களே முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நிலையில் எதிர்மறையாக இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.