விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் விஜய் நிகழ்ச்சிக்கு வந்திறங்கி மேடையில் பேசி அதிர வைத்தார். அரசியல் பற்றி எதையாவது பேசுவார் என பலரும் காத்திருந்த நிலையில் அவர் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை, ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், சில நகைச்சுவையான விஷயங்களையும் மட்டுமே பேசினார். அவர் கூறியதாவது, 1990 களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவானார், போக போக ஒரு சீரியசான போட்டியாளராக இருந்தார். அவரை தாண்ட வேண்டும் என நானும் போட்டி போட்டி ஓடினேன், அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய். ஜெயிக்க வேண்டும் என்ற போட்டியாளர் உங்களுக்குள் இருக்க வேண்டும், அது தான் உங்களை உயர்த்தும், நீங்கள் தான் உங்களுக்கான போட்டியாளர்.
தேவையான விமர்சனமும், தேவையற்ற எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும் என்று கூறினார். மேலும் பேசியவர் குஷ்பு முகத்தையே பார்த்தாலே நான் ஆட்டோமேட்டிக்காக சின்னத்தம்பி படத்திற்கு சென்றுவிடுவேன், கமலா தியேட்டரில் அந்த படத்தை பார்க்க அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி என் பெண் தோழியுடன் சென்று படம் பார்த்தேன் என்று கூறினார். இதை கேட்டதும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யா பெண் தோழி குறித்து கேக்க, நீ இருமா நா கூப்பிடுறேன் என விஜய் சொன்னதும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
Girl Friend Name Sonnara 😁 #VarisuAudioLaunch #Varisupic.twitter.com/V3HCVbKJRA
— David Billa (@David_Bilaaaaa) December 25, 2022
நான் ரத்த தானம் செய்வதற்கு காரணம் ரத்தத்திற்கு மட்டும் தான் உயர்ந்த ஜாதி கிடையாது, தாழ்ந்த ஜாதி கிடையாது, மதம் கிடையாது, பேதம் கிடையாது. மனிதர்கள் தான் இதை பிரித்து பார்த்து பழகிவிட்டோம் என்று கூறினார். மேலும் தனது ரசிகர்கள் பலரும் ரத்த தானம் செய்வதில் ஆர்வம் காட்டுவது தனக்கு பெருமையாக இருப்பதாக கூறியுள்ளார்.