மக்களே எச்சரிக்கை! காலையிலேயே வெளுத்து வங்க போகும் மழை!

0
225
People beware! In the morning, the rain will turn white!
People beware! In the morning, the rain will turn white!

மக்களே எச்சரிக்கை! காலையிலேயே வெளுத்து வங்க போகும் மழை!

தென்மேற்கு  வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.அதனை தொடர்ந்து தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ததது.

நேற்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழகம் மாவட்டங்களான புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்தது. மேலும் தூத்துக்குடி,ராமநாதபுரம்,தேனி,தென்காசி,கன்னியாகுமரி,திருநெல்வேலி, விருதுநகர், புதுக்கோட்டை,சிவகங்கை,திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர்,மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் இன்று காலை பத்து மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி,கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ,தஞ்சாவூர்,சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை பத்து மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleபெற்றோர்களே எச்சரிக்கை! தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகள் பாதிப்பு! அமைச்சரின் பரபரப்பு தகவல்!
Next articleமத்திய அரசில் பணிபுரிய விருப்பமா ? டிகிரி முடித்த பட்டதாரிகள் உடனே விண்ணப்பியுங்கள் !