ரேஷன் கடை ஊழியர்களுக்கென அசத்தல் திட்டம்! ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்!
கடந்த வாரம் ரேஷன் கடைகளுக்கென அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.அந்த அறிவிப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரசி வழங்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த வாரம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அப்போது அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில் மக்களுக்கு சத்தான உணவு தேவைப்படுகின்றது.அதனால் முதல்வர் முக ஸ்டாலினின் ஆணைப்படி பொதுமக்களுக்கு நியாவிலை கடைகளில் வழங்கப்படும் அரசி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசியுடன் கலந்து வழங்கப்படும் என கூறியிருந்தார்.
மேலும் இரும்பு சத்து ,போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்து அடங்கிய இந்த செறிவூட்டப்பட்ட அரிசி 100 கிலோ அரிசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படுவதினால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என கூறினார்.இவ்வாறு ரேஷன் கடைகளில் புது புது திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் கூட்டுறவுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் ரேஷன் கடைகளில் அரசி வழங்கும் சிறப்பு பணிக்கு ஊக்கத்தொகையாக குடும்ப அட்டைக்கு 50 பைசா வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரதம மந்திரி கரீ கல்யாண் யோஜனா திட்டத்தில் அரசி வழங்கும் விற்பனையாளர்களுக்கு சேவை திட்டங்களால் ஏற்பட கூடிய பணிச்சுமையை ஈடுசெய்ய விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.