கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! இந்த லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்க!
கடந்த வாரங்களில் மாண்டஸ் புயல் காரணமாக மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டனர்.அப்போது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கனமழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது தான் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது.
இந்நிலையில் இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வலுவிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் தமிழகம் ,புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் 30 ஆம் தேதி தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என தெரிவித்துள்ளனர்.அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நேரத்தில் 15 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வாய்ப்பு. அதனை கன்னியாகுமரி,நெல்லை,தூத்துக்குடி,தென்காசி,திருப்பூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர்,மதுரை,திண்டுக்கல் மற்றும் காரைக்கால் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.