பேருந்துகள் இயங்காது வெளியான அதிர்ச்சி தகவல்! பொதுமக்கள் கடும் அவதி!
புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் அந்த கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. அதிகாரிகள் தங்களின் விருப்பம் போல் செயல்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்து இருகின்றார். இந்நிலையில் அதிமுக இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக முன்னதாகவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் வணிகர்கள் சங்க கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு வழங்கவேண்டும் என காவல்துறையினரிடம் மனு அளித்தனர்.அந்தவகையில் புதுவையில் இன்று காலை முதல் பல இடங்களில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.
அதனை தொடர்ந்து புதுவையில் அரசு பேருந்தை தவிர்த்தது தனியார் பேருந்துகள் எதுவும் இயங்க வில்லை அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.மேலும் சென்னை,விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் அனைத்தும் புதுவை எல்லையான மதகடிபட்டி வரை மட்டுமே இயக்கப்படுகின்றது.அதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். ஒரு சில கடைகள் திறக்கப்பட்டுள்ளது.அவ்வாறு திறக்கப்பட்டுள்ள கடைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு மாநிலச் செயலர் ஏ.அன்பழகன் உள்பட 15அதிமுக நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.