இன்று காலை முதல் டுவிட்டர் கணக்கு செயல்படுவதில் சிக்கல்! எலான் மஸ்க் எடுத்து வரும் அதிரடி மாற்றங்கள்!
உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் என்பவர் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.அதன் பிறகு அவர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.அதனை தொடர்ந்து ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். ப்ளூ டிக் கணக்குகளுக்கு வழங்கப்படும் கட்டணத்தை உயர்த்தி வழங்கினார்.
முன்னதாக ப்ளூடிக் கணக்குகள் பெறுவதற்கு சற்று கடினமாக இருந்து வந்த நிலையில் தற்போது அவை பெறுவது சுலமாக்கபட்டது.அதனால் போலி தகவல்கள் பரப்புவது அதிகரிக்கபட்டது.அதனால் ப்ளூ டிக் சேவையை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.ப்ளூ டிக் கணக்குகளுக்கு கலர் செக் மார்க் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு துறையினருக்கும் தனி தனி செக்மார்க் வழங்கப்பட்டது.அதனை டுவிட்டர் குழுவினர் பிரித்து அறிவிப்பார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டது.டுவிட்டர் மக்களிடையே அதிகளவு பங்களிப்பு வழங்கி வருவதினால் கேரக்டர் வரம்பு ஆயிரமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
டுவிட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்தரவதை,தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பாதுகாப்பு குழு மற்றும் ஆலோசனை குழு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. மேலும் டுவிட்டரில் செயல்பட்டு வந்த ஹேஷ்டேக் வசதி அதிரடியாக நீக்கப்பட்டது,
இந்நிலையில் இன்று காலை முதல் வலைதளத்தில் டுவிட்டர் கணக்கை லாகிங் செய்வதில் பல்வேறு வகையான சிக்கல் ஏற்பட்டுள்ளது.பயனர் பெயர் மற்றும் கடவு எண்ணை உள்ளீடு செய்த பின் எரர் வருவதால் டுவிட்டரை கணினியில் பயன்படுத்துவது முடியவில்லை.
அதனால் அதிகளவு புகார் எழுந்து வந்த நிலையில் சிக்கலை சரிசெய்யும் பணியில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.எலான் மஸ்க் டுவிட்டரின் கொள்கையில் சீர்திருத்தங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.