கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள்!

0
233
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள். குடும்ப உறவு அதி அற்புதமாக காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை ஓரளவிற்கு அனுகூலமாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் மீது செலுத்தப்பட்ட பழிகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் முக்கிய புள்ளிகளாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் மறையும். மருத்துவச் செலவுகள் கண்டிப்பாக குறையும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை கண்டிப்பாக உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைந்து மகிழ்ச்சியை தரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் உண்டாகும் நாள்!
Next articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here