தனுசு – இன்றைய ராசிபலன்! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

0
113
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு – இன்றைய ராசிபலன்! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். குடும்ப உறவு பக்கபலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதைவிட சிறப்பாக இருக்கும். சிறுதூற பயணங்கள் மூலம் உங்கள் சந்தோசம் அதிகரிக்கும்.

 

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பணியிட மாறுதல் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும்.

 

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயண வாய்ப்பு மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகம் கிடைக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெளியூர் கிளம்பி செல்வார்கள்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருப்பதைக் கண்டு மணமகிழ்ந்து போவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

 

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அடுத்த வயதில் இருக்கும் நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அண்டர்களுக்கு பயண வாய்ப்புகளின் மூலம் சில நன்மைகள் நடைபெறும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.