படுத்தவுடன் ஒரே நிமிடத்தில் தூக்கம் வர பாலுடன் இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும்!
இந்த காலத்தில் பல பேருக்கு வரக்கூடிய ஒரு பிரச்சனை தான் தூக்கமின்மை. அதிக நேரம் மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்சினை பெரும்பாலும் ஏற்படுகிறது. மனஅழுத்தம் ,அதிக வேலை, குடும்ப பிரச்சனை, போன்ற விஷயங்களால் கூட தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம்.
இதய நோய், சர்க்கரை வியாதி, அதிக ரத்த அழுத்தம், போன்ற நோய்களாலும் தூக்கம் பாதிக்கப்படலாம். இந்த மாதிரி எந்த பிரச்சனைகளாலும் தூக்கமின்மை ஏற்பட்டால் அதற்கான ஒரு எளிய வீட்டு வைத்தியத்தைப் பார்ப்போம்.
இதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் பொருள் கசகசா. ஒரு ஸ்பூன் கசகசா எடுத்துக்கொண்டு அதில் ஒரு கால் டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் ஊற விடவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் எடுத்துக் கொள்ளவும். அதில் ஆறு மணி நேரம் ஊற வைத்த கசகசாவை சேர்க்கவும். அதன் பிறகு பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். கசகசா ஐந்து நிமிடத்தில் நன்றாக வெந்து விடும். அதன் பிறகு இதனை இறக்கி ஆறவிடவும். இதனை ஒரு டம்ளரில் சேர்த்து அருந்தவும். அடியில் தங்கி இருக்கும் கசகசாவையும் சேர்த்து சாப்பிடவும்.
தூக்க மாத்திரை உதவியோடு தூக்கம் மேற்கொண்டால் ஒரு நாளைக்கு மட்டும் தான் நம்மால் நிம்மதியாக தூங்க முடியும்.ஆனால் அடுத்த நாள் தூக்கத்திற்கு மீண்டும் மாத்திரையின் உதவியை நாட துவங்கும் மற்றும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். ஆனால் இந்த இயற்கையான கசகசா பால் எலும்புகள் நரம்புகளை வலுப்படுத்தும். மனதை அமைதி அடைய செய்து ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும். அடுத்த நாள் நாம் சுறுசுறுப்பாக நமது வேலைகளை பார்க்கலாம்.