நிகழ்ச்சியில் மக்களுக்கு கெட்டுபோன உணவை போட்ட கேட்டரிங் சர்வீஸ்! 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

0
145
In the catering service that put spoiled food for people! More than 100 people admitted to the hospital!
In the catering service that put spoiled food for people! More than 100 people admitted to the hospital!

நிகழ்ச்சியில் மக்களுக்கு கெட்டுபோன உணவை போட்ட கேட்டரிங் சர்வீஸ்! 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி ஞானஸ்நான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.அந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அங்கு வந்தவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.அந்த உணவை சாப்பிட்ட பலருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்டு அதே பகுதியில் உள்ள மருவத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் அந்த விழாவிற்கு உணவு சப்ளை செய்த கேட்டரிங் சர்வீஸ் ஏஜென்சி மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர். கேட்டரிங் நிறுவனம் மீது இந்திய தண்டனை சட்டம் 268,296 மற்றும் 272 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.