100 மாணவிகளுக்கு ஒரே கழிவறை பள்ளியில் தொடரும் அவலம்! அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை கோரிக்கை வைக்கு பெற்றோர்!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாகூரில் என்ற பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது.அந்த பள்ளியில் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 100 க்கு மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
மேலும் அந்த பல்லியானது குறுகிய இடத்தில் உள்ளது.அதனால் மாணவர்களுக்கு பள்ளியின் நுழைவாயில் பகுதியிலேயே இரண்டு சிறிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது.அந்த இரண்டு கழிவறைகளில் ஒன்றை ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர்.மீதமுள்ள ஒன்றை மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
அதனால் பள்ளியின் இடைவேளை நேரத்தில் மாணவிகள் சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.மேலும் இந்த கழிவறையில் ஒரே நேரத்தில் ஐந்து மாணவிகள் சென்று வருவதினால் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதால் மாணவிகளுக்கு அடிக்கடி உடல் நல குறைவு ஏற்படுகின்றது.இதுபோல உடல் நல குறைவால் மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்படுகின்றது.மேலும் படிப்பில் முழு கவனம் செலுத்தாமல் அவர்களின் எதிர்காலம் நினைத்து பெற்றோர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் அங்குள்ள அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது என பெற்றோர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.அதனால் கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி கூடுதல் கழிவறைகள் கட்டி தரவேண்டும்.மேலும் கூடிய விரைவில் அனைத்து அடிப்படை வசதியுடன் மாற்று இடத்தில் பள்ளி ஒன்று கட்டித்தர வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.