ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி!

0
251

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இவர் கடந்த மாதம் 30ஆம்தேதி டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள ரூர்கிக்கு அதிகாலை காரில் சென்றார். கட்டுப்பாட்டை இழந்த காரினால் அங்கிருந்து தடுப்பு சுவரில் மோதி ரிஷப் விபத்தில் சிக்கினார். காரின் கண்ணாடி கதவை உடைத்து வெளியேறிய அவரை அந்த வழியே வந்த போக்குவரத்து கழகத்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் காப்பாற்றி டேராடூன் மேத்ஸ் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் சேர்க்கப்பட்டார். அவருக்கு தலை,முதுகு ,மற்றும் காலில் அதிக அடிபட்டு இருந்தது. தற்போது அவரது உடல்நிலை ஓரளவு சீரடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மும்பை மாற்றப்படுவதாக பிசிசிஐ  அறிவித்தது.

இதனை அடுத்து ரிஷபை மும்பை மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ ஏற்பாடு செய்தது. ரிஷப் மேக்ஸ் மருத்துவமனையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பை கொண்டுவரப்படுகிறார். அங்கிருந்து கோகிலா பெண் திருபாய் அம்பானி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவார். விளையாட்டு மருத்துவ சிகிச்சை துறை தலைவர் , மருத்துவர் தின்சாவின் மேற்பார்வையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். காலில் ஏற்பட்ட தசைநார் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும். ரிஷப் பண்ட் பிசிசிஐ மருத்துவ குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் பிசிசிஐ  வழங்கும் என அதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவெறித்தனமாக வெளியானது வாரிசு ட்ரைலர்…பக்காவான குடும்ப திரைப்படம் என்பதை நிரூபித்துவிட்டது !
Next articleவாரிசு படத்தின் டிரைலர் வெளியீடு! 20 நிமிடங்களில் 2 லட்சம் பார்வையாளர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here