நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அதாவது வங்கியின் வாடிக்கையாளர்கள் எவரும் அவர்களது வலைத்தள பக்கங்களில் வங்கி மற்றும் நிதி விவரங்களை பகிர்ந்துகொண்டு அதன் மூலம் அவருக்கு மோசடி நடந்தால், இதற்கு வங்கி எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, தனது வங்கி கணக்கில் இருந்து தவறான ட்ரான்ஸாக்ஷன் நடந்துவிட்டது என கூறியதோடு அந்த பதிவில் அவரது வங்கி கணக்கின் பல முக்கிய தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார். இவருக்கு பதிலளிக்கும் விதமாக தான் தற்போது வங்கி இந்த செய்தியினை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி வங்கி தரப்பிலிருந்து தெரிவிக்கையில், “தயவுசெய்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தளத்தில் உங்கள் வங்கி அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம்.
Dear Customer, the resolution is provided in the middle of the email body kindly have a look. Thank you.
— State Bank of India (@TheOfficialSBI) December 19, 2022
இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு வங்கி பொறுப்பாகாது, இந்தத் தகவலை உடனடியாக நீக்குமாறு பரிந்துரைக்கிறோம். DM மூலம் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனை. வங்கிக் கணக்கு தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால் நீங்கள் சமூக ஊடகங்களில் புகாரைப் பதிவு செய்யும் போது, வங்கிக் கணக்கு தொடர்பான எந்தவித ரகசியத் தகவலையும் தவறுதலாகப் பகிர வேண்டாம். இதை செய்தால் நீங்கள் பெரிய மோசடியில் சிக்க நேரிடும், இந்த சூழ்நிலையில் வங்கி உங்களுக்கு எந்தவித உதவியும் செய்யாது. என்று பாரத ஸ்டேட் வங்கி அதன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.