பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
கொரோனா பெருந்தொற்று என்பது முதன்முதலில் சீனாவில் பரவ தொடங்கியது.அதனையடுத்து படிபடியாக உலகநாடுகளுக்கு பரவி மக்களின் இயல்பு வாழ்கையை முடக்கியது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது.அதனால் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது.
இந்நிலையில் கடந்த வாரங்களில் மழை பெய்து வந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மழை பொழிவு குறைந்து வரும் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை உள்ள வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்றது.
அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு புத்தாண்டு விடுமுறையை சேர்த்து ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.விடுமுறை முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டது.இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகளவு பனி நிலவி வருவதினால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அந்த விடுமுறையானது மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
மேலும் வடமாநிலங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு டிசம்பர் மாதம் இறுதியில் இருந்தே குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிகளுக்கு டிசம்பர் 25ஆம் தேதியில் இருந்து ஜனவரி 5ஆம் தேதி வரை தான் விடுமுறை அளிக்கப்பட்டது ஆனால் அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் நடப்பாண்டில் வழக்கத்தை விட அதிகளவு பனி பொழிவு உள்ளது என தெரிவித்துள்ளனர்.