மதிய உணவு திட்டத்தில் இனி கோழிக்கறியும் பழ வகைகளும்!! மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

0
121

மதிய உணவு திட்டத்தில் இனி கோழிக்கறியும் பழ வகைகளும்!! மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் கோழிக்கறியும் சீசனுக்கு ஏற்ப கிடைக்கும் பழ வகைகளும் வழங்கப்படும் என்று மாநில அரசின் அறிவிப்பு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:

இத்திட்டமானது ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று கூறியுள்ளது.இத்திட்டம் குறித்து பள்ளிக் கல்வித் துறை கூறுகையில்,பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் ஏற்கனவே அரிசி சோறு, பருப்பு, உருளைக்கிழங்கு, சோயா பீன்ஸ்,முட்டை மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு இனி இந்த மாதத்தில் இருந்து வாரம் ஒரு முறை கோழிக்கறியும் அந்த பருவத்தில் கிடைக்கும் பழ வகைகளையும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது இதற்காக அரசால் 317 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் இந்த திட்டம் ஏப்ரல் மாதத்திற்கு மேல் தொடருமா என்பது முடிவு எடுக்கப்படவில்லை என்று மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.மேற்கு வங்கத்தில் இந்த வருடம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகிதால் கடும் விமர்சனங்களையும்,சர்ச்சைகளையும் பெற்று வருகிறது.

author avatar
Pavithra