எச்சரிக்கை! தினமும் டீயுடன் ரஸ்க் சாப்பிடுறீங்களா? ஆபத்து! இதை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்!

0
196

எச்சரிக்கை! தினமும் டீயுடன் ரஸ்க் சாப்பிடுறீங்களா? ஆபத்து! இதை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் டீயுடன் அல்லது பாலுடன் தினமும் ரஸ்க் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளனர்.அதிலும் பலருக்கு ரஸ்க் என்பது விருப்பமான தீனியாகவும் மாறியுள்ளது.

ஆனால் இந்த ரஸ்கியினை நாம் தினமும் சாப்பிட்டால் நம் உடல் நலத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாமென்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ரஸ்க் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதை நாம் தினமும் சாப்பிட்டால் நம் உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்? என்பதனை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரஸ்க் பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட கோதுமை (மைதா) அல்லது ரவையினால் தயாரிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி ரஸ்கில் அதிக அளவு சர்க்கரை கலக்கப்படுகிறது.

ரஸ்க் தயாரிப்பதற்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மற்றும் ரவையிலிருந்து அனைத்து நார் சத்துகளும் பிரித்துஎடுத்துவிட்டு வெறும் மாவில் மட்டும் அதிகளவு சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

ரஸ்க் முழுமையாக கோதுமை மாவில் தயாரிக்கப்பட்டது போன்ற தோற்றம் அளிக்க கேரமல் கலரிங் அல்லது பிரவுன் ஃபுட் கலரிங் சேர்க்கப்படுகிறது. இந்த நிறமூட்டியானது மனித உடலிலிருக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் மிக ஆபத்தான பொருளாகும்.

ரஸ்கை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க நிறைய இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
இவற்றின் சுவை மற்றும் வாசனைக்காகவும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. என்று நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

மேலும் ரஸ்க் நன்றாக மொறுமொறுவென இலகுவாக இருக்க அதிக அளவு சோடா மாவு கலக்கப்படுகிறது.

ரஸ்கை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

தினமும் இரண்டு ரஸ்கை சாப்பிட்டால்,ஒரு நாளிற்கு நம் உடலுக்கு தேவையான இரத்த சர்க்கரையின் அளவுக்கு மேல் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.

இந்த ரஸ்கை நாம் தினமும் எடுத்துக் கொள்வதினால் நம் குடலில் கெட்ட பாக்டீரியாக்களை வளர செய்யும்.

ரஸ்க் தினமும் எடுத்துக் கொண்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைய செய்கிறது.

தினமும் ரஸ்க் எடுத்துக் கொண்டால் மிக மோசமான செரிமான பிரச்சனை மற்றும் பசியின்மைக்கு வழிவகைக்கிறது.

இது ரத்தத்தின் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது மேலும் உடலில் கொலஸ்ட்ராலையும் அதிகரிக்க செய்கிறது.

அதிகளவு ரஸ்கை நாம் எடுத்துக் கொண்டால் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே குழந்தைகளுக்கு ரஸ்க் போன்ற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ரசாயன கலந்த பொருட்களை கொடுப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள் ரஸ்கை எடுத்துக் கொள்வது முற்றிலும் தடுக்க வேண்டும்.

Previous articleதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. உடனடியாக விண்ணப்பியுங்கள்..!
Next articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உடன்பிறப்புகளின் உதவிகள் கிடைத்து மகிழும் நாள்!