மக்களே எச்சரிக்கை! இந்த பொருட்களை இவர்களிடம் மட்டும் தான் தர வேண்டும் மீறினால் நடவடிக்கை!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்கப்பட்டு வருகின்றது. பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொங்கல் பரிச்சினை பெற டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகின்றது.
மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ஜனவரி ஒன்பதாம் தேதி முதன் முதலில் மு க ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்ன அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை, பொங்கல் 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மாட்டுப் பொங்கல் மற்றும் 17ஆம் தேதி உழவர் திருநாள் காணும் பொங்கல் என நான்கு நாட்களும் தமிழகம் முழுவதுமே விழா காலமாக காணப்படும்.
பொங்கல் பண்டிகையின் முதல் நாளாக கடைபிடிக்கப்படும் போகி பண்டிகை என்பது பழையன கழித்தலும் புதியன புதலும் என்ற அடிப்படையில் தேவையற்ற பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே போகிப் பண்டிகை என்று பழைய பொருட்களை அதிகாலை நேரத்தில் தீ வைத்து எரிக்கும் பழக்கம் அனைவரிடமும் வந்துவிட்டது ஆண்டுக்கு ஆண்டு பழைய துணிகள், டயர் ட்யூபுகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை எரிப்பதன் மூலம் காற்று மாசு அடைந்து வருகின்றது.
இதனால் சென்னையில் காற்று மாசு எச்சரிக்கை அளவை கடந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதினால் மாசு இல்லாத போகி பண்டிகையை கொண்டாடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் தேவையற்ற பொருட்களை எரிப்பதை தவிர்த்து அவற்றை தனியாக மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக வர உள்ளனர் அவர்களிடம் பழைய துணிகள் பெயர்களை பொதுமக்கள் ஒப்படைக்கலாம். பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் மூலம் தெருக்களில் மாநகராட்சி ஊழியர்கள் காற்று மாசு இல்லாத போகிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும் 13 ஆம் தேதி இரவும் 14ஆம் தேதி அதிகாலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.