செலவே இல்லாமல் வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமா? இந்த மூன்று பொருட்களே போதும்!
தரையினை துடைக்க எவ்வித செலவு இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையான முறையில் தூய்மையாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
தற்போதுள்ள காலகட்டத்தில் தரைகளை துடைக்க பல விதமான கெமிக்கல்ஸ் மற்றும் விலை அதிகம் உள்ள பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துகிறோம். ஆனால் அவை ஆரோக்கியமாக இருப்பதில்லை. எனவே நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஆரோக்கியமான முறையில் எவ்வித செலவு இன்றி தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் மற்றும் அதனை செய்முறைகளை இந்த பதிவின் மூலமாக காண்போம்.
நாம் சமையலறையில் பயன்படுத்தக்கூடிய கல் உப்பு இதில் உள்ள வேதிப்பொருட்கள் பயன்படுத்தி தரையினை துடைப்பதினால் எவ்வித பூச்சிகள், எறும்புகள் வீட்டிற்குள் வராமல் தடுக்க உதவும். கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது .
பச்சைக் கற்பூரம் இதனை நன்றாக பொடி செய்து தரையினை துடைப்பதன் மூலமாக நல்ல ஒரு வாசனை பொருளாக பயன்படுகிறது மற்றும் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.
ஒரு ஸ்பூன் மஞ்சத்தூள் இதில் பல வகையான நற்குணங்களை கொண்டுள்ளது. முக்கிய கிருமி நாசினியாக பயன்படுகிறது . பாத்திரத்தில் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்து 100 கிராம் கல் உப்பு மற்றும் இரண்டு பச்சை கற்பூரம் பொடி செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் 2 ஸ்பூன் மஞ்சள் தூள் இதனுடன் ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலைகள் ஆகியவற்றை நன்றாக கலந்து தரைகளை துடைப்பதன் மூலமாக கிருமிகளிடமிருந்து நம்மளை பாதுகாக்கிறது. மேலும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.